சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான சாத்தியமான இடங்களாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணல்லூர் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு தேர்வுப் பட்டியலில் சேர்த்துள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு மாற்று இடங்களைக் கண்டறிய மாநில அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.