தெலங்கானாவில் 'அம்மானியா தெலங்கானென்சிஸ்' (Ammannia telanganensis) என்ற புதிய நன்னீர் பூக்கும் தாவர இனம் கண்டறியப்பட்டுள்ளது. இது லித்ரேசியே (Lythraceae) குடும்பத்தைச் சேர்ந்த, ஓராண்டு வாழும், சிறுசெடி வகை அரை நீர்வாழ் தாவரமாகும். கண்டறியப்பட்ட மாநிலத்தின் பெயரிலேயே இவ்வினம் பெயரிடப்பட்டுள்ளது; இது இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட தாவரப் பன்முகத்தன்மைக்குப் புதிய சேர்க்கையாகும்.