இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) முதன்முறையாக ஏழு நைட்ரோசமைன் மாசு குறிப்புத் தரநிலைகளை வெளியிட்டுள்ளது. மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு அல்லது பொதியிடலின்போது உருவாகக்கூடிய தீங்கான சேர்மங்களான நைட்ரோசமைன் மாசுகளை ஆய்வகங்கள் துல்லியமாகக் கண்டறிந்து அளவிட இவை உதவும். இதன்மூலம் மருந்துச் சோதனை, தர உறுதி, ஒழுங்குமுறை இணக்கம் மேம்படும். மருந்துத் தரம், மருந்தியல் தரநிலைகள் குறித்து கொல்கத்தா மத்திய மருந்து ஆய்வகத்துடன் (CDL) தனது முதல் கலந்துரையாடல் கூட்டத்தையும் IPC நடத்தியது.