குளோர்பெனிரமைன் மேலியேட், பினைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு கொண்ட நிலையான அளவுக் கூட்டு மருந்துகளை (FDC) நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காகத் தயாரிப்பது, விற்பது, விநியோகிப்பதற்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இக்கூட்டு மருந்துகள் சிறு குழந்தைகளுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், பாதுகாப்பான மாற்று மருந்துகள் உள்ளன என்றும் அரசு தெரிவித்தது.