ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சர் 'மிஷன் சம்ருத் காவ்' (வளமான கிராமம் இயக்கம்) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்த ஒன்றிய, மாநில நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஊரக வளர்ச்சிக் கட்டமைப்பு இது. மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் மாவட்ட புத்னி வட்டாரம், தேவாஸ் மாவட்ட கதேகாவ் வட்டாரம் ஆகியவற்றில் முன்னோட்டத் திட்டங்கள் செயல்படும். ஒருங்கிணைந்த பண்ணையம், பெண் விவசாயிகள் தொழில்கள், ஊரக உள்கட்டமைப்பு, கிடங்குகள், குளிர்பதனச் சங்கிலி, கிராம அளவிலான பதப்படுத்துதல் ஆகியவற்றை இது ஊக்குவிக்கும். தற்சார்பு, வறுமையற்ற, பொருளாதார ரீதியாகத் துடிப்பான கிராமங்களை உருவாக்குவதும், நெருக்கடியால் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்லும் இடம்பெயர்வைக் குறைப்பதும் இதன் நோக்கம்.