ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, ‘தரவுப் பகிர்வு, இயங்குதன்மை மற்றும் பங்குதாரர் அணுகல் கொள்கையை’ புது தில்லியில் வெளியிட்டது. ஊரகக் குடிநீர்த் துறையில் ஒன்றிய அரசு, மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள், கிராம ஊராட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களை இணைக்கும் கூட்டாட்சி முறைத் தரவுப் பகிர்வுக் கட்டமைப்பை இது உருவாக்குகிறது; பொது அடையாளங்காட்டிகள், தரப்படுத்தப்பட்ட மெட்டாடேட்டா, இயங்குதன்மையுள்ள பதிவேடுகள், பாதுகாப்பான டிஜிட்டல் சேவைகள் இதற்குப் பயன்படும். சொத்துக் கண்காணிப்பு, குறைதீர்ப்பு, சேவைப் பொறுப்புடைமை ஆகியவற்றில் கிராம ஊராட்சிகளுக்குக் கூடுதல் பங்கு கிடைக்கும். நோக்கம் சார்ந்த தரவு அணுகல் மூலம் AI பகுப்பாய்வு, புவியிடத் திட்டமிடல், நீர்த்தரக் கண்காணிப்பு, டிஜிட்டல் ட்வின்கள் சாத்தியமாகும். ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0-இன் கீழான சுஜலம் பாரத் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக இக்கொள்கை உள்ளது.