கர்நாடகாவின் மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 'காட்டியானா கர்நாடகா' (Ghatiana karnataka) என்ற புதிய நன்னீர் நண்டு இனத்தை அறிவியலாளர்கள் விவரித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பதிவு செய்யப்பட்ட காட்டியானா பேரினத்தின் 15-ஆவது இனம் இதுவாகும்; கர்நாடகாவுக்கு மட்டுமே உரிய (endemic) இனங்களில் இதுவும் ஒன்று. உலகளாவிய பல்லுயிர் வெப்பப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையின் நன்னீர்ப் பல்லுயிர் வளத்துக்கு இக்கண்டுபிடிப்பு மேலும் சான்றாகிறது.