இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், ஹரியானா மாநிலம் குருகிராமில் 'டவர் ஆஃப் ஜஸ்டிஸ்' (நீதி கோபுரம்) மாவட்ட நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்தார். நீதியை எளிதில் அணுகக்கூடியதாக்குவதும், நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதும் இந்த வளாகத்தின் நோக்கம். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் சர்வதேச நடுவர் மன்ற மையம் (International Arbitration Centre), பெண் வழக்கறிஞர்களுக்கான தனி அறை (Ladies Bar Room), குழந்தைகள் பராமரிப்பு மையம் ஆகியவை இதில் அமைந்துள்ளன.