ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், கேரள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செந்துருணி (Shendurney) வனவிலங்கு சரணாலயத்தின் ஆற்றங்கரைக் (riparian) காடுகளில் 'Humboldtia nairiana' என்ற புதிய பசுமைமாறா மர இனத்தைக் கண்டறிந்துள்ளனர். இம்மரம் பருப்புவகைத் தாவரங்களின் ஹம்போல்டியா (Humboldtia) பேரினத்தைச் சேர்ந்தது. இக்கண்டுபிடிப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் அகணிய (endemic) தாவரப் பட்டியலை விரிவாக்குவதோடு, ஆற்றங்கரைக் காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.