இந்தியாவின் முதல் நகர்ப்புற வானிலை சோதனைக்களம் மற்றும் ஏரோசோல் ஆய்வகம் (Urban Weather Testbed and Aerosol Observatory) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், நகர்ப்புறங்களை மையமாகக் கொண்ட காலநிலை ஆராய்ச்சிக்கு உதவவும் இவ்வசதி அமைக்கப்பட்டுள்ளது. நகர அளவிலான வானிலை கணிப்புக்குத் தேவையான சிறந்த தரவுகளை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.