பண்டைய அறிவைப் பாதுகாத்து எண்ணிமமாக்கும் ஞான பாரதம் (Gyan Bharatam) இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஒன்றிய கலாச்சார அமைச்சகம் இந்தியாவின் முதல் நாடு தழுவிய கையெழுத்துப் பிரதி வரைபடக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கையெழுத்துப் பிரதிகளைக் கண்டறிந்து, ஒருங்கிணைந்த தேசிய எண்ணிமக் களஞ்சியம் உருவாக்கப்படும். ஒவ்வொரு பிரதியும் புவிக்குறியிடப்பட்டு (geotag), ஆவணப்படுத்தப்பட்டு, எண்ணிமமாக்கப்படும்; இதனால் அழிவும் அறிவுசார் திருட்டும் தடுக்கப்படும். இம்முயற்சி புது தில்லி பிரகடனத்துடன் இணைந்தது; இந்தியாவின் கலாச்சார மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.