கிழக்கு இமயமலைப் பகுதியிலிருந்து Caulocera hollowayi, Asura buxa என்ற இரண்டு புதிய லைக்கன் அந்துப்பூச்சி இனங்களை இந்திய விலங்கியல் ஆய்வகம் (ZSI) கண்டறிந்துள்ளது. இவை சிக்கிம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் பதிவாகின. லைக்கன் அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகளையும் அந்துப்பூச்சிகளையும் உள்ளடக்கிய லெப்பிடாப்டெரா (Lepidoptera) வரிசையைச் சேர்ந்தவை. மாசுபாட்டுக்கு உணர்திறன் கொண்ட லைக்கன்களைச் சார்ந்து வாழ்வதால், இவை காற்றின் தரத்துக்கான பயனுள்ள குறிகாட்டிகளாகச் செயல்படுகின்றன. கிழக்கு இமயமலை ஒரு முக்கியப் பல்லுயிர் வளமையப் பகுதியாகும் (biodiversity hotspot).