அரிய கடல் ஆம்பிபாட் (amphipod) உயிரினமான ஸ்டெனோதோ லோரி (Stenothoe lowryi), ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அர்ஜ்யபள்ளி கடற்கரையில் இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இறால் போன்ற இந்தச் சிற்றுயிரி இதுவரை மலேசியக் கடற்கரைகளில் மட்டுமே அறியப்பட்டிருந்தது.
இது ஆம்பிபோடா (Amphipoda) வரிசையின் ஸ்டெனோதொய்டே (Stenothoidae) குடும்பத்தைச் சேர்ந்தது. சிறு தாவரங்களையும் விலங்குக் கழிவுப் பொருட்களையும் உண்ணும் துப்புரவு உயிரியாக (scavenger) கடல் உணவுச் சங்கிலியில் இது பங்காற்றுகிறது.