முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன், சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொழில்முறைச் சாதனைக்கான முன்னாள் மாணவர் விருதை (Alumni Award for Professional Achievement, 2026) பெறும் முதல் இந்தியப் பொருளாதார நிபுணர் ஆனார். இவ்விருதின் 85 ஆண்டு வரலாற்றில் இந்தியப் பொருளாதார நிபுணர் ஒருவர் இதைப் பெறுவது இதுவே முதல் முறை. சுப்பிரமணியன் 2018 முதல் 2021 வரை இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயல் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.