மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள லோக் பவனில் டார்ஜிலிங் மலைத் திருவிழாவை (Darjeeling Hill Festival) இந்தியக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பழங்குடி மற்றும் பூர்வகுடி சமூகங்களின் வளமான மரபுகள், கலைகள், வாழ்க்கை முறைகளை இத்திருவிழா கொண்டாடுகிறது. அவர்களின் இசை, கைவினைப் பொருட்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பரந்த மக்களிடம் கொண்டு சென்று, மலைப் பகுதியின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை வெளிப்படுத்த இது ஒரு தளமாக அமைகிறது.