நக்சலிசத்துக்கு எதிராகப் பெரும் வெற்றி கிடைத்ததையடுத்து, இடதுசாரித் தீவிரவாதம் (LWE) மீண்டும் தலைதூக்காமல் தடுக்க, ஒன்றிய உள்துறை அமைச்சகம் 'மரபு உந்துதல் பிரதேசங்கள்' (Legacy Thrust Territories) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- முன்பு நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆதரவைப் பெறும் மாவட்டங்களே இவை.
- 2000-ல் சுமார் 200 மாவட்டங்கள் இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன; 2025-க்குள் இது 38 ஆகக் குறைந்தது.
- தற்போது 7 மாவட்டங்கள் மட்டுமே பட்டியலில் உள்ளன: சத்தீஸ்கரில் 5, ஜார்க்கண்டில் 1, ஒடிசாவில் 1.
- பாதுகாப்புப் படைகள், சாலை மற்றும் தகவல்தொடர்பு, நிர்வாகம், தீவிரவாதிகள் சரணடைதல் ஆகியவற்றுக்கான ஆதரவு தொடரும்.