மாநிலத்தின் கடைசி ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் நக்சலிசம் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இடதுசாரித் தீவிரவாதத்தை (LWE) ஒழிப்பதற்கான காலக்கெடுவாக 2026 மார்ச் 31-ஐ ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. நக்சலிசம் அல்லது மாவோயிசம் என்றும் அழைக்கப்படும் இடதுசாரித் தீவிரவாதம், 1967-இல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நக்சல்பாரி இயக்கத்திலிருந்து தோன்றியது. பின்னர் இது 'சிவப்பு வழித்தடம்' (Red Corridor) எனப்படும் பகுதி முழுவதும் பரவி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவின் சில பகுதிகளைப் பாதித்தது.