குஜராத்தில் உள்ள மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஆலை வளாக ரயில் பக்கவழித்தடம் (railway siding), உலகளாவிய கார்பன் கடன் பதிவகமான வெர்ராவின் 'சரிபார்க்கப்பட்ட கார்பன் தரநிலை' (VCS) கீழ் உலகின் முதல் 'போக்குவரத்து முறை மாற்றத் திட்டமாக' (Modal Shift Transportation Project) பதிவு செய்யப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தைச் சாலையிலிருந்து ரயில் போன்ற குறைந்த உமிழ்வு முறைக்கு மாற்றி கார்பன் உமிழ்வைக் குறைப்பதே இத்தகைய திட்டம். VCS பதிவின் மூலம் இதனால் குறையும் உமிழ்வுகளைச் சரிபார்த்து கார்பன் கடன்களாக வழங்க முடியும்.