இந்தியாவின் முதல் தேசியப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையான 'பிரஹார்' (PRAHAAR)-ஐ ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு போன்ற உலகளாவிய அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் மறையாக்கத் தளங்களின் தவறான பயன்பாடு உள்ளிட்ட நீர், நிலம், வான், இணையவெளி அச்சுறுத்தல்களை இது அடையாளம் காண்கிறது. மின்சாரம், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி போன்ற முக்கியத் துறைகளின் பாதுகாப்பையும் இது உள்ளடக்கி, சட்ட நடவடிக்கை, தீவிரவாதப் போக்கிலிருந்து மீட்பு, இணையக் கண்காணிப்பு, ஒன்றிய–மாநில ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.