‘Tamil Nadu Legislature - A Journey in Legislating & Policy Making’ என்ற நூலைச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு சென்னையில் வெளியிட்டார். ஆலயப் பிரவேச அங்கீகாரச் சட்டம் (1939), விற்பனை வரிச் சட்டம் (1939), தேவதாசி ஒழிப்புச் சட்டம் (1947), பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிய 1989 சட்டம் போன்ற முக்கியச் சட்டங்களை இந்நூல் விவரிக்கிறது. மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற நலத்திட்டங்களையும், சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றிய 1967 தீர்மானத்தையும் இது நினைவுகூர்கிறது.