40 ஆண்டுகள் நீடித்த ஆய்வின்படி, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதியில் மனித ஆதிக்கம் மிகுந்த நிலப்பரப்புகளில் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகள், தோட்டங்கள், குடியிருப்புகளில் உள்ள 37 குழுக்களை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை மழைக்காடுகளுக்கு மட்டுமே உரிய இந்த முதனி, IUCN சிவப்புப் பட்டியலில் 'அழிவின் விளிம்பில்' (Endangered) உள்ளது; CITES பின்னிணைப்பு I-இல் இடம்பெற்றுள்ளது; வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972-இன் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.