சிவகங்கை மாவட்டம் கீழடியில் ₹24 கோடியில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து, நொய்யல் அருங்காட்சியகம் (ஈரோடு), நாவாய் அருங்காட்சியகம் (மண்டபம்), பெருஞ்சோழர் அருங்காட்சியகம் (தஞ்சாவூர்) ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். மனோரா நினைவுத் தூணின் முகப்பு விளக்கொளி, மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி நினைவு மண்டபம் (அரியலூர்), தீரன் சின்னமலையின் வெண்கலக் குதிரைச் சிலை (ஈரோடு) ஆகியவற்றைத் திறந்தார். கரூரில் முன்னாள் MP சி. முத்துசாமி சிலையையும், நாமக்கல்லில் சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பி. சுப்பராயனின் மார்பளவுச் சிலை மற்றும் நினைவகத்தையும் திறந்து, கா. ராஜன், ர. சிவானந்தம் எழுதிய 'தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள்' நூலை வெளியிட்டார்.