யானைக்கால் நோயை (நிணநீர் ஃபைலேரியாசிஸ்) ஒழிக்க, ஆண்டுதோறும் நடைபெறும் நாடு தழுவிய பெருந்திரள் மருந்து வழங்கல் இயக்கத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தொடங்கியது. தகுதியுள்ளோருக்கு டைஎதில்கார்பமசின், அல்பெண்டசோல், ஐவர்மெக்டின் ஆகிய ஃபைலேரியா எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட நோய் பரவியுள்ள 12 மாநிலங்களை இது உள்ளடக்குகிறது. ஒட்டுண்ணிப் புழுக்களால் ஏற்பட்டு கொசுக்களால் பரவும் இந்தப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய், யானைக்கால், விதைப்பை வீக்கம் (ஹைட்ரோசீல்), நீடித்த ஊனம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். SDG-3-க்கு ஏற்ப 2027-க்குள் இதை ஒழிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.