உள்துறை அமைச்சகம், நாகாலாந்து அரசு, கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (ENPO) ஆகியவை இணைந்து, எல்லைப்புற நாகாலாந்து பிராந்திய ஆணையம் (FNTA) அமைப்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது துவென்சாங், மோன், கிஃபிரே, லாங்லெங், நோக்லாக், ஷமாடோர் ஆகிய ஆறு கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கும். 46 துறைகள் மீதான அதிகாரங்களும் வட்டார வளர்ச்சிக்கான நிதியுதவியும் இவ்வமைப்புக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ENPO இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட எட்டு நாகா பழங்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாகாலாந்துக்குச் சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் சட்டப்பிரிவு 371(A)-ஐ இவ்வேற்பாடு மாற்றவில்லை.