2024, 2025 ஆண்டுகளுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெறுவோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். 2024-க்கான விருது மூத்த நடிகை எம்.என். ராஜத்துக்கும், 2025-க்கான விருது மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கும் வழங்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பெயரிலான இவ்விருது, தமிழ்த் திரையுலகுக்கும் கலைகளுக்கும் சிறப்பான சேவையாற்றியோருக்கு வழங்கப்படுகிறது. இருவரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் ரொக்கமும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.