மாநிலத்தின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்துக்குச் சென்னை கிண்டியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.14.50 கோடி செலவிலான இச்சிறப்பு மையம், உலக வங்கி ஆதரவுடனான TN-SHORE (தமிழ்நாடு கடல் வளங்கள், நீலப் பொருளாதாரத்தை நிலையாகப் பயன்படுத்துதல்) திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி, கண்காணிப்பு, பயிற்சி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த அமைக்கப்படுகிறது. உலகின் ஆறு கடல் ஆமை இனங்களில் ஐந்து காணப்படும் ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், கடலூர் கடற்கரைகளில் ஆண்டுதோறும் பெருமளவில் முட்டையிடுதல் நடைபெறுகிறது; அழிவாய்ப்புள்ள ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு இம்மையம் சிறப்புக் கவனம் செலுத்தும்.