நுரையீரல் புற்றுநோய்க்கான முதல் தேசியச் சான்று அடிப்படையிலான வழிகாட்டுதல்களை 'Lung Cancer Treatment and Palliation: Evidence-Based Guidelines' என்ற தலைப்பில் இந்தியா வெளியிட்டுள்ளது. நோயறிதல், சிகிச்சை, வலி தணிப்புப் பராமரிப்பு (palliative care) ஆகியவற்றை உள்ளடக்கிய 15 பரிந்துரைகளை இந்த ஆவணம் வகுக்கிறது. நோயை முன்கூட்டியே கண்டறிதலை ஊக்குவிப்பது, சிகிச்சையைத் தரப்படுத்துவது, நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைத் தரத்தில் உள்ள வட்டார இடைவெளிகளைக் குறைப்பது ஆகியவை இதன் நோக்கங்கள். இவ்வழிகாட்டுதல்கள் அரசு, தனியார் சுகாதார நிறுவனங்கள் இரண்டுக்கும் பொருந்தும்.