அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

தேசியம் 1 நிமிட வாசிப்பு

நமஸ்தே திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பாளர்கள் குறித்த முதல் தேசியத் தரவு வெளியீடு

சேமி

நமஸ்தே (NAMASTE – இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுச் சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை) திட்டத்தின் கீழ், குப்பை சேகரிப்பாளர்கள் குறித்த முதல் தேசியத் தரவுத்தொகுப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சுமார் 1.52 லட்சம் பேரின் விவரங்களைச் சேகரித்து உறுதிசெய்துள்ளன. இவர்களில் ஏறத்தாழ 84.5% பேர் பட்டியலினம், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; 48.7% பெண்கள், 51.3% ஆண்கள், 12 பேர் திருநர். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தும் இத்திட்டம், துப்புரவுப் பணியாளர்களை அங்கீகரிப்பதையும், அபாயகரமான கழிவுநீர்க் கால்வாய், செப்டிக் தொட்டி சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.