அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

தமிழ்நாடு 1 நிமிட வாசிப்பு

ஓமந்தூரார் தோட்டத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குச் சிலை

சேமி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். வள்ளலாரின் பற்றாளரான ரெட்டியார், 1947 மார்ச் 23 முதல் 1949 ஏப்ரல் 6 வரை சென்னை மாகாணத்தின் பிரதமராக (Premier) இருந்தார். அவரது ஆட்சியில் சென்னை ஆலய நுழைவு அங்கீகாரச் சட்டம், 1947 தேவதாசி அர்ப்பணிப்பு ஒழிப்புச் சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14.29% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது - இந்தியாவிலேயே இதுவே முதல் இடஒதுக்கீடு. 1948-இல் சென்னை அரசின் முதல் விமானமும் வாங்கப்பட்டது.