யுனிசெஃப் (UNICEF) தமிழ்நாடு அரசுடன் முக்கியக் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்துகொண்டது; இதன் மூலம் உலகிலேயே யுனிசெஃப்-இன் முதல் துணைத்தேசிய (sub-national) அரசுக் கூட்டாளியாகத் தமிழ்நாடு ஆனது. குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்கான சான்று அடிப்படையிலான தீர்வுகளை விரிவுபடுத்த, யுனிசெஃப்-இன் புத்தாக்க அலுவலகம் தொழில்நுட்பத் திறன் மற்றும் பொதுத்துறைப் புத்தாக்கத்துக்கு ஆதரவு அளிக்கும். உலக அளவில் யுனிசெஃப் புத்தாக்க அலுவலகத்துக்கும் ஒரு துணைத்தேசிய அரசுக்கும் இடையிலான முதல் ஒத்துழைப்பு இதுவாகும்.