அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் (1893-1963) எழுதிய 'வோல்காவிலிருந்து கங்கை வரை' (From Volga to Ganga) நூலின் புதிய தமிழ்ப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது இந்நூலின் ஏழாவது தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். நாடகக் கலைஞரும் ஆசிரியருமான அ. மங்கை இதனை மொழிபெயர்த்துள்ளார்; சீர் வாசகர் வட்டம் இதனை வெளியிட்டுள்ளது. 20 கதைகள் வழியாக, சுமார் கி.மு. 6000 முதல் கி.பி. 1942 வரையிலான மனித சமூகத்தின் வளர்ச்சியை இந்நூல் விவரிக்கிறது.