கைமூர் வனவிலங்கு சரணாலயத்தைப் புலிகள் காப்பகமாக மேம்படுத்துவதற்கான திருத்தப்பட்ட திட்டத்துக்குப் பீகார் அரசு ஒப்புதல் அளித்தது. தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஒப்புக்கொண்டால், மேற்கு சம்பாரணில் உள்ள வால்மீகி புலிகள் காப்பகத்துக்கு அடுத்து இது பீகாரின் இரண்டாவது புலிகள் காப்பகமாகும். வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் பிரிவு 38V-இன் கீழ், NTCA-வின் ஆலோசனையின் பேரில் மாநில அரசுகள் புலிகள் காப்பகங்களை அறிவிக்கின்றன.