இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள், அருணாச்சலப் பிரதேசத்தில் 'சிறிய கொம்புத் தவளைகள்' என அழைக்கப்படும் ஜிங்கோஃப்ரிஸ் (Jingophrys) பேரினத்தைச் சேர்ந்த ஐந்து புதிய இனங்களைக் கண்டறிந்தனர். இவற்றில் ஜிங்கோஃப்ரிஸ் டனோகோகோ (Jingophrys tanogogo) இந்தியாவில் அறியப்பட்ட முதல் நத்தை உண்ணும் தவளை; மெகோஃப்ரிடே (Megophryidae) குடும்பத்திலும் பதிவான முதல் நத்தை உண்ணும் இனம் இதுவே. ஜிங்கோஃப்ரிஸ் டானிஇடாடீ (Jingophrys taniitatii) ஜீரோ பள்ளத்தாக்கின் டானி பழங்குடியினரின் பெயரிலும், ஜிங்கோஃப்ரிஸ் சியாங்கென்சிஸ் (Jingophrys siangensis) சியாங் பகுதியின் பெயரிலும் பெயரிடப்பட்டுள்ளன. மற்ற இரண்டு இனங்கள் ஜிங்கோஃப்ரிஸ் ஹர்டி (Jingophrys hrdy), ஜிங்கோஃப்ரிஸ் வுலர்சோனி (Jingophrys wularsoni).