முக்கியமாக மெய்தி (Meitei) சமூகத்தினரால் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காகக் கொண்டாடப்படும் சமூகத் திருவிழாவான ‘நிங்கோல் சக்கௌபா’ (Ningol Chakouba) மணிப்பூரில் கொண்டாடப்பட்டது. ‘நிங்கோல்கள்’ என்று அழைக்கப்படும் திருமணமான மகள்கள் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று பாரம்பரிய விருந்தில் பங்கேற்று பரிசுகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். மணிப்பூரி மாதமான ஹியாங்கேயில் அமாவாசைக்குப் பிந்தைய இரண்டாம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.