தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தைக் கண்காணிக்க, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) நடமாடும் தரக் கட்டுப்பாட்டு வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னோட்டமாக முதலில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இவை சோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் மீயொலித் துடிப்பு வேகமானிகள், ரீபவுண்ட் சுத்தியல்கள் உள்ளிட்ட அழிவில்லாச் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைக் கட்டுமானத்தைப் பாதுகாப்பானதாகவும் நீடித்ததாகவும் மாற்றும் நோக்கில், நிகழ்நேர GPS கண்காணிப்பு வசதி கொண்ட தேசிய நெடுஞ்சாலைத் தரக் கண்காணிப்பு இணையதளத்தையும் அமைச்சகம் உருவாக்கி வருகிறது.