பசுமை ஹைட்ரஜன் வழிப்பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க, தேசியப் பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனாலுக்கான தரநிலைகளைப் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) அறிவித்துள்ளது. இந்த எரிபொருட்களைப் 'பசுமை' என வகைப்படுத்துவதற்கான தகுதி நிபந்தனைகளையும் உமிழ்வு வரம்புகளையும் இவை நிர்ணயிக்கின்றன. பசுமை அம்மோனியாவின் உயிரியல் அல்லாத பசுமை இல்ல வாயு உமிழ்வு ஒரு கிலோவுக்கு 0.38 கிலோ CO₂ சமமானத்தையும், பசுமை மெத்தனாலுக்கு ஒரு கிலோவுக்கு 0.44 கிலோ CO₂ சமமானத்தையும் மிகக்கூடாது. பசுமை மெத்தனால் உற்பத்திக்கான கார்பன் டை ஆக்சைடு உயிரியல் ஆதாரங்கள், நேரடிக் காற்றுப் பிடிப்பு அல்லது தற்போதுள்ள தொழில்துறை ஆதாரங்களிலிருந்து பெறப்படலாம். அளவீடு, கண்காணிப்பு, சரிபார்ப்பு, சான்றளிப்புக்கான விரிவான விதிகள் தனியாக வெளியிடப்படும்.