சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு, 2020-இன் கீழ், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கிக், தளத் (Platform) தொழிலாளர்களுக்கான தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டதை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் இதற்குத் தலைமை வகிப்பார்; ஒன்றிய, மாநில அரசுகள், திரட்டு நிறுவனங்கள் (aggregators), முதலாளிகள், தொழிற்சங்கங்கள், குடிமைச் சமூகம், தொழிலாளர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாரியம் ஒன்றிய அரசுக்கு நலத்திட்டங்களைப் பரிந்துரைக்கும், சமூகப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை வழங்கும், நலத்திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும். தொடர்புடைய சமூகப் பாதுகாப்பு நிதி மற்றும் கணக்கிலிருந்து மாநில அளவில் செய்யப்படும் பதிவுப் பராமரிப்பு, செலவினங்களையும் அது ஆய்வு செய்யும். வழக்கமான முதலாளி–தொழிலாளர் உறவுக்கு வெளியே வருமானம் ஈட்டுபவர்கள் கிக் தொழிலாளர்கள்; இணையத் தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குபவர்கள் தளத் தொழிலாளர்கள்.