கர்நாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பேருந்துப் பயணத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக்கும் 'த்வனி ஸ்பந்தனா' (Dhwani Spandana) முயற்சிக்காக 12-ஆவது பொதுத்துறை நிறுவன (PSU) தேசிய விருதைப் பெற்றுள்ளது.
த்வனி ஸ்பந்தனா என்பது பேருந்தில் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பு; இது பார்வைத்திறன் குறைபாடுள்ள பயணிகள் பேருந்துகளை அடையாளம் கண்டு, பிறரைச் சாராமல் தாங்களே பயணிக்க உதவுகிறது.