மஞ்சள்-சிவப்பு நிற கன்னடக் கொடிக்கு அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி அந்தஸ்து வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கர்நாடக முதலமைச்சர் அறிவித்தார். இக்கொடி கன்னட மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கன்னடர்களின் அடையாளத்தைக் குறிக்கிறது. தேசியக் கொடி விதிகளுக்கு இணங்கும் வகையில், கொடியின் வடிவமைப்பு, காட்சிப்படுத்தல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க அரசு முன்மொழிந்துள்ளது. 2018இல் சித்தராமையா தலைமையிலான அரசு, மஞ்சள், வெள்ளை, சிவப்புப் பட்டைகளுடன் கண்டபேருண்டா சின்னம் கொண்ட வேறொரு மாநிலக் கொடி வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்தது; ஆனால் அதற்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அரசமைப்பின் உறுப்பு 51A(a), அரசமைப்பு, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டிய அடிப்படைக் கடமையை வரையறுக்கிறது; தேசியக் கொடியுடன் மாநிலக் கொடியைக் காட்சிப்படுத்தும் ஏற்பாடுகள் தேசியக் கொடி விதித்தொகுப்புக்கு (National Flag Code) இணங்க வேண்டும்.