ஜார்க்கண்டின் பாரம்பரிய நாட்டுப்புற தாள இசைக்கருவியான 'மாந்தர்' (Mandar)-க்குச் சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவகம் புவிசார் குறியீடு (GI) வழங்கியுள்ளது. இக்கருவி செம்மண்ணால் ஆன உருளை வடிவ உடலையும், இரு முனைகளிலும் வெவ்வேறு அளவிலான தோல் மூடிய திறப்புகளையும் கொண்டது. ஜார்க்கண்டின் பழங்குடி மற்றும் நாட்டுப்புற இசையில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.