பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000இன் கீழ் தெற்கு பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு, 2000 நவம்பர் 15 அன்று இந்தியாவின் 28ஆவது மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது. பழங்குடி விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் (1875 நவம்பர் 15) இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. ‘தர்தி ஆபா’ (பூமியின் தந்தை) என்று அழைக்கப்படும் பிர்சா முண்டா, பிரிட்டிஷ் ஆட்சிக்கும் பழங்குடி மக்கள் சுரண்டப்படுவதற்கும் எதிராக உல்குலான் (மாபெரும் கிளர்ச்சி) இயக்கத்தை (1899–1900) வழிநடத்தினார். பெரும்பாலும் சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மிக உயரமான இடம் பரஸ்நாத் மலை ஆகும்.