சர்வதேச புவியியல் அறிவியல் ஒன்றியம் (IUGS) தொகுத்த மூன்றாவது 100 உலகப் புவியியல் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் (Third 100 World Geological Heritage Sites List) மகாராஷ்டிராவின் லோனார் ஏரி சேர்க்கப்பட்டுள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள இந்த ஏரி, சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பசால்ட் பாறையில் விண்கல் மோதியதால் உருவானது. பசால்ட் நிலப்பரப்பில் உருவான உலகின் ஒரே பெரிய உப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட பள்ள ஏரி இதுவாகும். 2022-இல் சேர்க்கப்பட்ட மேகாலயாவின் மாவ்ம்லுஹ் குகைக்கு (Mawmluh Cave) அடுத்து, இப்பட்டியலில் இடம்பெறும் இரண்டாவது இந்தியத் தளம் இதுவாகும். லோனார் ஏரி ஒரு ராம்சர் தளமாகவும் (2020), தேசியப் புவியியல் பாரம்பரியச் சின்னமாகவும் உள்ளது.