நிலையான உணவு அமைப்புகள் குறித்த சர்வதேச வல்லுநர் குழு (IPES-Food) “A New Geopolitics of Food” (உணவின் புதிய புவிசார் அரசியல்) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. வர்த்தகப் போர்கள், இராணுவ மோதல்கள், பலவீனமடைந்து வரும் பன்னாட்டு அமைப்புகள் ஆகியவை உலக உணவு அமைப்புகளை மாற்றியமைப்பதாகவும், பசி அதிகமுள்ள பகுதிகளில் உணவு போர் மற்றும் பொருளாதார அழுத்தத்துக்கான கருவியாக மேலும் மேலும் பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசுகள் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் பொது உணவு இருப்பு (Public Food Stockholding – PSH) முறையைப் பற்றியும் அறிக்கை விவாதிக்கிறது. இந்தியாவில் பொது உணவு இருப்புத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-க்கு ஆதரவாகச் செயல்படுகிறது; இதனை இந்திய உணவுக் கழகம் (FCI) நிர்வகிக்கிறது.