திமிங்கலச் சுறாக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 30 அன்று சர்வதேச திமிங்கலச் சுறா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் 'Save the Whale Shark Campaign'-ஐத் தொடங்கியது. பூமியின் மிகப்பெரிய மீனான திமிங்கலச் சுறா (Rhincodon typus) கடல் சூழலமைப்பின் முக்கிய ஆதார இனம்; இந்தியாவின் முழுக் கடற்கரையிலும் காணப்படும் இது, குஜராத் கடற்கரையில் அதிக அளவில் கூடுகிறது. IUCN சிவப்புப் பட்டியலில் 'அழிவின் விளிம்பில்' (Endangered) என்றும், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் அட்டவணை I-இலும் இது இடம்பெற்றுள்ளது.