இந்தியக் கடற்படையில் இரண்டு புதிய கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் உள்நாட்டுப் பல்நோக்குக் கப்பலான INS சமர்த்தக் (INS Samarthak) கர்நாடகாவின் கார்வாரில் கடற்படையில் இணைக்கப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் (Cochin Shipyard Limited) கட்டிய, மாஹே வகையைச் சேர்ந்த மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர்க் கப்பலான (Anti-Submarine Warfare Shallow Water Craft) INS மங்ரோல் (INS Mangrol), மகாராஷ்டிராவின் மும்பை கடற்படைத் தளத்தில் (Naval Dockyard) இணைக்கப்பட்டது.