இந்திய வன மற்றும் மரச் சான்றிதழ் திட்டத்தின் (IFWCS) கீழ் இந்தியாவின் முதல் 'பிரமாண்' (PRAMAAN) சான்றிதழ்களை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் வழங்கினார். 33,000 ஹெக்டேர் தோட்டங்களுக்காக ஆந்திரப் பிரதேச வன மேம்பாட்டுக் கழகமும் (APFDC), ஒடிசாவைச் சேர்ந்த ஒரு மூங்கில் விவசாயியும் சான்றிதழ் பெற்றனர். ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 2023 டிசம்பரில் தொடங்கிய இத்திட்டம், காடுகள், மரம் மற்றும் மரமல்லாத வனப் பொருட்களின் நிலையான மேலாண்மையைச் சான்றளிக்கிறது. தேசியப் பணித்திட்டக் குறியீடு (NWPC) 2023-இன் அடிப்படையில், சுயாதீனக் கள மற்றும் மேலாண்மைத் தணிக்கைகள் மூலம் சான்றளிப்பு நடைபெறுகிறது; இது உலகச் சந்தை அணுகலுக்கும் வனம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும்.