மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சோதனைகளில் 'கருடாஸ்திரா' (Garudastra) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இது வாகனத்தில் பொருத்தப்பட்ட, இந்தியாவின் மிகக் கனமான உள்நாட்டு 120 மி.மீ. மோர்டார் (பீரங்கி) அமைப்பாகும். இதனை நிபே லிமிடெட் (Nibe Limited) நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை நோக்கிய முயற்சியில், பீரங்கி அமைப்புகளில் உள்நாட்டுத் திறனை வளர்க்கும் மற்றொரு படியாக இது அமைகிறது.