நாகோயா நெறிமுறையைச் செயல்படுத்துவது குறித்த முதல் தேசிய அறிக்கையை (NR1) உயிரியல் பன்முகத்தன்மை உடன்படிக்கைச் செயலகத்திடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
- மரபணு வளங்களின் பயன்பாட்டால் கிடைக்கும் பலன்களைப் பகிரும் அணுகல் மற்றும் பலன் பகிர்வு (ABS) தொடர்பாக 2017 முதல் 2025 வரை இந்தியா மேற்கொண்ட பணிகளை இது விளக்குகிறது.
- நாடு முழுவதும் சுமார் 2,76,653 பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேசியப் பல்லுயிர் ஆணையமும் (NBA) மாநிலப் பல்லுயிர் வாரியங்களும் (SBBs) ஆராய்ச்சி, வணிகப் பயன்பாட்டுக்காக 12,830 அனுமதிகளை வழங்கியுள்ளன.
- ₹216.31 கோடி வசூலிக்கப்பட்டு, அதில் ₹139.69 கோடி உள்ளூர்ச் சமூகங்கள், விவசாயிகள், பாரம்பரிய அறிவு கொண்டோருடன் பகிரப்பட்டது.
- 2010-இல் ஏற்கப்பட்ட நாகோயா நெறிமுறை, மரபணு வளங்களின் பலன்களை நியாயமாகப் பகிர்வதையும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.