ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 24 தங்கம், 29 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. 341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், ஜப்பான் (250), கொரியக் குடியரசு (143) அடுத்த இடங்களிலும் இருந்தன. ஆடவர், மகளிர் ஹாக்கி, கிரிக்கெட், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, கபடி ஆகியவற்றில் இந்தியா தங்கம் வென்றது. மகளிர் ஹாக்கி அணி 44 ஆண்டுகாலத் தங்கக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது; பிரணவி அர்ஸ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் கோல்ஃப் வீராங்கனை ஆனார். துப்பாக்கி சுடுதலில் நீரு தண்டா, கைனன் செனாய் இணை கலப்பு அணி டிராப் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கம் வென்று, அப்பிரிவில் இந்தியாவின் முதல் ஆசிய விளையாட்டுத் தங்கத்தைப் பெற்றுத் தந்தது.