சர்வதேச எரிசக்தி முகமை (IEA), இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியையும் அதனால் கிடைக்கும் எரிசக்திப் பாதுகாப்பு நன்மைகளையும் எடுத்துரைக்கும் ‘இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சந்தை அறிக்கை 2026’ஐ வெளியிட்டுள்ளது. 2011 முதல் 2025 வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தால், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிச் செலவில் 100 பில்லியன் டாலருக்கும் மேல் இந்தியா சேமித்துள்ளது; 2030க்குள் இச்சேமிப்பு 200 பில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026இல் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் 300 GWஐக் கடந்துள்ளது; இது கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்வு. நிறுவப்பட்ட மின் திறனில் 50% புதைபடிவம் அல்லாத மூலங்களிலிருந்து பெறும் இலக்கை, திட்டமிட்டதைவிட ஐந்து ஆண்டுகள் முன்னதாக 2025இல் இந்தியா எட்டியது. இருப்பினும், 2024–25இல் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு சுமார் 71%. 2030க்குள் புதுப்பிக்கத்தக்க மின் திறன் சுமார் 530 GWஐ எட்டும் என்றும், புதிய திறன் சேர்க்கையில் 80%க்கும் மேல் சூரிய ஆற்றலிலிருந்து வரும் என்றும் அறிக்கை கணிக்கிறது.